என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

அட்லி இயக்கத்தில், ஷாரூக்கான் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஜவான்'. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது. டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுடன் 'சாட்' செய்தார் ஷாரூக்கான்.
அப்போது ஒரு ரசிகர், “ஜவான்' படத்தில் நடிப்பதற்காக உங்களை தயார்படுத்திக் கொள்ள நிறைய படங்களைப் பார்த்தீர்களா,” எனக் கேட்டிருந்தார். அதற்கு ஷாரூக்கான், “அப்படிப்பட்ட ஒரு உலகத்தை உருவாக்கியதில் அவர்களது உணர்வுகளின் மொழியை புரிந்து கொள்ள நான் நிறைய அட்லீ படங்களையும், விஜய் சார், அல்லு அர்ஜுன் ஜி, ரஜினி சார், யஷ் மற்றும் மற்ற நடிகர்களின் படங்களையும் பார்த்தேன். மேலும், எனது சொந்த கதாபாத்திரத்தையும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டேன்,” என பதிலளித்துள்ளார்.
செப்டம்பர் 7ம் தேதி இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.