ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்துள்ள ஹிந்திப் படம் 'ஜவான்'. தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் மூன்று மொழிகளிலும் நேற்று வெளியானது.
24 மணி நேரத்தில் ஹிந்தி டிரைலர் 45 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஷாரூக்கான் நடித்து இதற்கு முன்பு வெளியான 'பதான்' படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 27 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றது. அந்த சாதனையை 'ஜவான்' டிரைலர் முறியடித்துள்ளது. இருப்பினும் இதுவரை வெளியான ஹிந்தித் திரைப்பட டிரைலர்களின் 24 மணி நேர சாதனையை 'ஜவான்' படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'ஆதிபுருஷ்' ஹிந்திப் படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 52 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. அந்த சாதனையை 'ஜவான்' டிரைலர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது முறியடிக்கப்படவில்லை.
அதே சமயம் 'ஜவான்' தமிழ் டிரைலருக்கு 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்து வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்துடன் அட்லீ, அனிருத், விஜய் சேதுபதி, நயன்தாரா என பல தமிழ் சினிமா தொடர்பு உள்ளதால்தான் இந்த வரவேற்பு. 'ஜவான்' தெலுங்கு டிரைலர் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அனைத்து விதமான தளங்களிலும் 'ஜவான்' டிரைலர் 112 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.