சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகரான சல்மான்கானின் சகோதரிகளில் ஒருவர் அர்பிதா கான். சமீபத்தில் இவரது வீட்டில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தோடுகள் காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் அளித்தார். தனது வீட்டிற்கு அவ்வப்போது உதவி செய்து வந்த பணியாளர் சந்தீப் ஹெக்டே என்பவர் மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சந்தீப் ஹெக்டே அந்த வைரத்தோடுகளை திருடியது உறுதியானது. அதுமட்டுமல்ல அவர் நகைகளை திருடியவுடன் எந்த ஒரு முன்னறிவிப்பும் சொல்லாமல் வேலைக்கு வராமல் ஓடிவிட்டதும் போலீசின் சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது சந்தீப் ஹெக்டே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டு சல்மான்கானின் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த மாதம் இதேபோல பிரபல ஹிந்தி பாடகர் சோனு நிகமின் தந்தை வீட்டிலும் அங்கே பணிபுரிந்த கார் டிரைவர் இதேபோன்று பணத்தை கொள்ளை அடித்து சென்றதும், இங்கே தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவின் வீட்டிலும் அங்கே பணிபுரிந்த பெண் இதேபோன்று நகைகளை திருடியதும் பரபரப்பை ஏற்படுத்தி அடங்கிய நிலையில், தற்போது சல்மான்கான் சகோதரி வீட்டில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.