Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'பாய்காட்' டிரெண்டுகளால் பரிதவிக்கும் பாலிவுட்

28 ஆக, 2022 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Bollywood-suffering-from-'Boycott'-trends

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பிறகு 'நெப்போட்டிசம்' சர்ச்சை அங்கு இன்னமும் இருந்து வருகிறது. வாரிசு நடிகர்களின் புதுப் புதுப் படங்கள் வரும் போது, அவர்களுக்கு ஆதரவு தருபவர்களின் படங்கள் வரும் போது குறிப்பிட்ட நபர்களையோ, படங்களையோ 'பாய்காட்' செய்ய வேண்டும் என டிரெண்டிங்கை ரசிகர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அதனால் பல முன்னணி நடிகர்களின் ஹிந்திப் படங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடத்தில் பாலிவுட்டில் வெளிவந்த பல முக்கிய படங்கள் எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளன. சமீபத்தில் ஆமீர்கான் நடிப்பில் வெளிவந்த 'லால் சிங் சத்தா' படமும், சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' படமும் 'பாய்காட்' டிரெண்டிங்கில் வசமாக சிக்கி தோல்வியைத் தழுவியுள்ளன. விஜய் தேவரகொண்டா வாரிசு நடிகராக இல்லாமல் சுயமாக முன்னேறியவர்தான். இருந்தாலும் அந்தப் படத்தை கரண் ஜோஹர் இணைந்து தயாரித்ததே 'பாய்காட்'டிற்குக் காரணமாக அமைந்துவிட்டது.

அடுத்து 'பாய்காட்' டிரெண்டிங்கில் 'பிரம்மாஸ்திரா' படம் சிக்கியுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட், மவுனி ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஹிந்தியில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. 'பாய்காட் பிரம்மாஸ்திரா' என்ற டிரெண்டிங் கடந்த சில நாட்களாக டிரெண்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வலையில் இந்தப் படமும் சிக்குமா, தப்பிக்குமா என்பது பாலிவுட்டிலும், ரசிகர்களிடத்திலும் பெரும் கேள்வியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சோனாலி போகத் தள்ளாடியபடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியானதுசோனாலி போகத் தள்ளாடியபடி செல்லும் ... விமர்சித்த தியேட்டர் அதிபரை மும்பைக்கே சென்று சந்தித்த விஜய் தேவரகொண்டா விமர்சித்த தியேட்டர் அதிபரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

பார்மிக் வாரியர் - Coimbatore,இந்தியா
30 ஆக, 2022 - 11:03 Report Abuse
பார்மிக் வாரியர் பாலிவுட் படங்கள் இந்து தர்மத்தைக் கேலி செய்வதை ஒரு நடைமுறையாகவே வைத்திருந்தன. மறைமுகமாக கோயில் பூசாரிகளை அசிங்க படுத்தி காட்சிப்படுத்தியும், இந்து மத சின்னங்கள் அணிந்தவர்கள் வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டார். ஆனால் மற்ற காயங்கள் சார்ந்த பாதிரியார் களும், முஸ்லிம் குருமார்களும் உயர்வாக, தவறே செய்யாதவர்களாகவும் சித்தரிக்ப்பட்டனர். மேலும் தவறான வழிகளில் சம்பாதித்த பணங்களை முறைப்படுத்த பாலிவுட் பயன்படுத்தப்பட்டது. விளைவு? பாலிவுட் தறி கெட்டு ஆடியது. நடிகர்கள் என்னமோ கடவுளின் அவதாரங்கள் மாதிரி நினைத்துக்கொண்டு தங்களுக்கு நிகர் யாருமே இல்லாதமாதிரி திமிர் காட்டினர். விளைவு பாய்காட். வரவு நன்று விட்டால் எல்லா திமிர்த்தனமும் தானாக அடங்கும்.
Rate this:
29 ஆக, 2022 - 14:40 Report Abuse
டண்டணக்கா அமீர்கானுக்கு நல்லா வேணும். லைகரின் தோல்வி ஒரு பாடமாக இருக்க வேண்டும். தான் தான் ஒரு அதீத புத்திசாலி என்ற நினைப்பில் இருந்தார். இந்தியாவை விட்டே போய்விடுவேன் என்றார்.
Rate this:
28 ஆக, 2022 - 18:02 Report Abuse
pimpilakki pilapi படம் நல்லா இருந்தா மக்களே ஆதரவு குடுப்பாங்க. இல்லனா ஊத்திக்கத்தான் செய்யும். பாய்காட்டாவது கேர்ள்காட்டாவது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in