''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகையும், பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் ஆகஸ்ட் 22ம் தேதி இரவு கோவாவில் ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளார். அதையடுத்து 23ம் தேதி அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. அப்போது அவரது குடும்பத்தினர் போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து சோனாலி போகத்தின் உதவியாளர்களே கொலை செய்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு வெளியிட்டார்கள்.
இது குறித்து கோவா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உதவியாளர்கள் சுதீர்சங்வான் மற்றும் சுக்விந்தரிடம் கோவா காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதையடுத்து உடற்கூர் ஆய்வில் அவரது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு அவரது சொந்த ஊரான ஹரியானா மாநிலத்துக்கு சோனாலி போகத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது .
இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட சோனாலி போகத்தின் உதவியாளர்கள் அவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஒரு கெமிக்கலை 1.5 கிராம் அளவு சோனாலி போகத்தின் குளிர்பான பாட்டிலில் கலந்து அவரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஹோட்டலுக்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் , சோனாலி போகத் தள்ளாடியபடியே செல்ல, அவரை கைத்தாங்கலாக உதவியாளர் அழைத்துச் செல்லும் காட்சி இடம்பெற்ற வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து சோனாலி போகத்தின் மரணத்திற்கு காரணமான அவரது உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.