100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
பாலிவுட் நடிகராக அனுபம் கெர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் குணசித்திர மற்றும் வில்லன் நடிகராக தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் பிரபுதேவா நடித்த விஐபி, லிட்டில் ஜான், குற்றப் பத்திரிக்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் தற்போதும் பிஸியான நடிகராக நடித்து வரும் அனுபம் கெர் தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். அதற்கான காரணத்தை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “பல வீடுகளில் அப்பா இறந்த பிறகு பிள்ளைகளிடம் சொத்துக்களை பிரிப்பதில் பிரச்சனை ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. பல நண்பர்களிடம் பேசியபோது அதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும் சில பேர் தந்தையை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும் இன்னும் சிலர் சொத்தை எழுதி வைக்கும்படி கையெழுத்து போடச் சொல்லி நிர்பந்திப்பதாகவும் பல நிகழ்வுகளை கூறினார்கள். வீடு வாசல் என சொத்தாக பிரித்துக் கொடுப்பதை விட பணத்தை பிரித்துக் கொடுப்பது எளிது என்பதால் இப்போது வரை வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் 1978ல் மதுமதி கபூர் என்பவரை அனுபம் கெர் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களிலேயே முதல் மனைவி பிரிந்து சென்றுவிட அதன் பிறகு 1985 கிரண் கெர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத நிலையில் இரண்டாவது மனைவிக்கு ஏற்கனவே பிறந்த மகனான சிக்கந்தர் கெர் என்பவரை வளர்ப்பு மகனாக வளர்த்து வருகிறார். இப்படி ஒரே ஒரு மகன், அதுவும் வளர்ப்பு மகன் மட்டுமே இருக்கும் நிலையில், அப்படி யாருக்கு இடையே சொத்து பிரச்சனை வந்து விடப்போகிறது என்று வாடகை வீட்டில் அனுபம் கெர் வசித்து வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.