இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஹிந்தி திரையுலகமான பாலிவுட்டில் அதிக படங்கள் இயக்கிய தமிழ் இயக்குனர் யார் என்று கேட்டால், கே.பாலச்சந்தர், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா, அட்லி படங்களைத்தான் கணக்கு பார்ப்பார்கள். ஆனால் பாலிவுட்டில் அதிக படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் எஸ்.எஸ்.வாசன். அவர் இயக்கிய படங்கள் அனைத்தையும் அவரே தயாரித்தார்.
தனது முதல் படமான சந்திரலேகாவை முதன் முதலாக பாலிவுட்டில் அதே பெயரில் இயக்கினார். அதன் பிறகு நிஷான், மங்களா, சன்சார், மிஸ்டர் சம்பத், பகத் இன் ஹவ், இசன்யாத், ராஜ் திலக், பைகாம், கஹர்னா, தீன் பஹாருனியன், சத்ரங்கி படங்களை இயக்கினார்.
பெரும்பாலான படங்களை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்கினார். படங்களுக்கு ஹிந்தி மொழி டப்பிங் பேசுவதற்கென்றே தனி ஸ்டூடியோ கட்டினார். அதில் நிரந்தரமாக ஹிந்தி டப்பிங் கலைஞர்களை பணி அமர்த்தினார்.