7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் | மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணையும் ராஷ்மிகா | டான் 3ம் பாகத்தில் இணைந்த கிர்த்தி சனோன்! | தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்! | பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா! | அக்., 31ல் ஒரே பாகமாக வெளியாகும் ‛பாகுபலி : தி எபிக்' | 'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் |
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று சைப் அலிகான், கரீனா கபூர். 2012ல் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தான் கரீனா இரண்டாவதாக ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது கரீனா மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என பாலிவுட் மீடியாக்கள் சிலவற்றில் செய்திகள் வெளிவந்தன. அவற்றை கரீனா மறுத்துள்ளார்.
அது குறித்து சமூக வலைத்தளத்தில், “நான் கர்ப்பம் இல்லை. தான் ஏற்கெனவே இந்திய மக்கள் தொகைக்கு நிறைய செய்துவிட்டேன் என சைப் சொன்னார்” என கொஞ்சம் கிண்டலாகவும் பதிவிட்டிருந்தார்.
சைப் அலிகான் அவரது முதல் மனைவி நடிகை அம்ரிதா சிங் இருவருக்கும் ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மகள் சாரா அலிகான் தற்போது பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகை. மகன் இப்ராஹிம் குழந்தை நட்சத்திரமாக ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். தற்போது கரண் ஜோஹர் இயக்கி வரும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
சைப் அலி கானுக்கு இரண்டு மனைவிகள் மூலம் மூன்று மகன்கள், ஒரு மகள் இருப்பதைத்தான் கரீனா கபூர் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.