''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி விருந்து நடைபெறுவதை அறிந்த என்சிபி அதிகாரிகள், இது தொடர்பாக நடத்திய அதிரடி சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 23 வயது மகன் ஆர்யன் கானை கப்பலில் வைத்தே போதைப்பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். முதலில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அக்டோபர் 2ம் தேதி ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் என்சிபி தரப்பில் சுமார் 6,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆர்யன் கான் பெயர் இதில் இடம் பெறவில்லை. இதனால் ஆர்யன்கான் விடுதலை செய்யப்பட்டார். ஆர்யன்கான் சும்மா விருந்துக்குதான் சென்றார் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று அதற்கு விளக்கம் சொன்னார்கள்.
இந்த நிலையில் மும்பையில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் ஆர்யன் கலந்து கொண்டதாக நேற்று ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ஆர்யன்கான் கருப்பு சட்டை அணிந்து சரக்கு பார்ட்டியில் பங்கேற்ற காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது.