விஜய் 68 : முதல் பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா | அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா |
நெல்சன் அறிமுக இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாநாயகியாக நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'கோலமாவு கோகிலா'. இந்தப் படத்தை ஹிந்தியில் 'குட் லக் ஜெர்ரி' என ரீமேக் செய்துள்ளார்கள்.
நயன்தாரா கதாபாத்திரத்தில் ஹிந்தியில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். சித்தார்த் சென்குப்தா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜுலை 29ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. டிரைலருக்கு ஹிந்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த டிரைலருக்கு இதுவரையில் 23 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது. பஞ்சாப் பின்னணியில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள். டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழு எதிர்பார்ப்பில் உள்ளது.
ஜான்வி கபூர் நடித்து ஓடிடியில் நேரடியாக வெளியாகும் மூன்றாவது படம் இது. 'கோஸ்ட் ஸ்டோரிஸ், குஞ்சன் சக்சேனா' ஆகிய படங்கள் இதற்கு முன்பு ஓடிடியில் வெளிவந்தன.