மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் |
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்தவர் ஹிந்தி நடிகை ஆலியா பட். இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆலியா பட்டுக்கு இரட்டை குழந்தை பிறக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ரன்பீர் கபூரிடம் தொகுப்பாளினி ஒருவர், நீங்கள் இரண்டு உண்மை மற்றும் ஒரு பொய் சொல்ல வேண்டுமென அவர் கேட்கிறார். அதற்கு, ‛‛நாங்கள் இரட்டை குழந்தையை எதிர்பார்க்கிறோம், நான் ஒரு பெரிய சரித்திர கதையில் நடிக்கிறேன், சினிமாவிற்கு சற்று இடைவெளி கொடுக்க போகிறேன்'' என்றார். இதையடுத்து இரட்டை குழந்தை, சரித்திர படம் தான் உண்மை, சினிமாவிற்கு பிரேக் விட மாட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.