23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், லண்டனில் தலைமறைவாக வாழும் மோசடி தொழில் அதிபர் லலித் மோடியுடன் லிவிங் டூ கெதராக வாழ்வதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்த தகவலை வெளியிட்டதே லலித் மோடிதான்.
இந்த தகவல் வெளியானதும் சமூக வலைத்தளத்தில் சுஷ்மிதான சென்னை கிழித்து தொங்க விட்டார்கள். பணத்துக்காக எதையும் செய்வீர்களா? என்பது பிரதான கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் சுஷ்மிதா சென் கோபமான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மகிழ்ச்சியான ஓர் இடத்தில் இருக்கிறேன். யாரையும் நான் திருமணம் செய்யவில்லை. திருமணத்தின் அடையாளமாக எனது விரல்களில் எந்த மோதிரமும் இல்லை. என்னைச் சுற்றி அளவற்ற அன்பு சூழ்ந்துள்ளது அவ்வளவே. தற்போது மீண்டும் எனது வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டேன். இதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு எழுதியிருக்கும் சுஷ்மிதா, இந்த பதிவோடு தன் குழந்தைகளோடு இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.