பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா! | அக்., 31ல் ஒரே பாகமாக வெளியாகும் ‛பாகுபலி : தி எபிக்' | 'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் |
தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்களால் ரசிகர்களை வசீகரித்தவர் பாலிவுட் நடிகை சாரா அலிகான். தனுஷ் இந்தியில் நடித்த அத்ராங்கி ரே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் இவர் தான். வெளிநாடுகளுக்கு அடிக்கடி டூர் கிளம்புவதை வாடிக்கையாக வைத்துள்ள சாரா அலிகான் சமீபத்தில் இத்தாலிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.. இந்தநிலையில் அங்கே இருந்த சலூனுக்கு சாரா அலிகான் சென்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ஜாலியாக ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பிய சாரா அலிகான், போகிற போக்கில் வழியில் உள்ள சலூன் ஒன்றில் நுழைகிறார். அங்கிருந்த சிகை அலங்கார நிபுணரிடம் தனது சிறிய கூந்தலில் ஒரு சிறுபகுதிய காட்டி அதை மட்டும் வெட்டி விடுமாறு கேட்க, அடுத்த சில நொடிகளிலேயே அவரது ஹேர்கட் முடிந்து விடுகிறது. இதையடுத்து கண்ணாடியில் அதை சரி பார்த்துக்கொண்ட சாரா, சிகை அலங்கார நிபுணருக்கு நன்றி சொல்லி கிளம்பி செல்வதாக அந்த வீடியோ முடிகிறது.