ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த 2010ஆம் ஆண்டு, 470 கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கியவர் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி. இது தொடர்பாக அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் லலித்மோடி இந்தியாவிலிருந்து தப்பித்து லண்டனில் தஞ்சமடைந்தார்.
இந்தியா அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் அவர் லண்டனில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வருகிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தகவலை வெளியிட்டிருப்பதும் லலித் மோடி தான். சுஷ்மிதா சென்னுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தான் தற்போது சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்கி இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதாகவும், திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும், அதுவரை டேட்டிங் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
46 வயதாகும் சுஷ்மிதா சென் இதுரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இவர் அதன் மூலம் பாலிவுட் நடிகை ஆனார். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தார். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். லலித் மோடிக்கு 56 வயதாகிறது. இவருக்கும், மினால் சக்ரானி என்பவருக்கும் 1991ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மினால் 2018ல் லண்டனில் உயிரிழந்தார்.