'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பான் இந்தியா ரிலீஸ் என்கிற வார்த்தை புழக்கத்தில் வந்தபின் தென்னிந்திய மற்றும் பாலிவுட் சினிமாவை சேர்ந்தவர்கள் ஒன்றாக கலந்து தங்களது படங்களின் புரமோஷன்களுக்கு மாறி மாறி உதவிக்கொள்கின்றனர். தற்போது இன்னும் ஒரு படி மேலேபோய் இந்திய சினிமாவும், ஹாலிவுட் சினிமாவும் கைகோர்த்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதும் அதன் மையப்புள்ளியாக தமிழ் நடிகரான தனுஷ் இருப்பதும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை என்றே சொல்லலாம்.
ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'தி கிரே மேன்' என்கிற ஹாலிவுட் படம் இன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பையில் முகாமிட்டுள்ள படக்குழுவினர் சமீபத்தில் இதன் பிரீமியர் ஷோவை திரையிட்டனர். இதில் கலந்துகொள்ள இந்தி பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் நடிகர் ஆமிர்கான் தனது லால் சிங் சத்தா பட புரமோஷனில் பிசியாக இருந்ததால் இந்த பிரீமியரில் கலந்துகொள்ள முடியவில்லை.
அதேசமயம் கிரே மேன் படக்குழுவினரை கவுரவிக்க நினைத்த ஆமீர்கான் ரூசோ பிரதர்ஸ், நடிகர் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினரை தனது வீட்டிற்கு அழைத்து குஜராத்தி பாணியிலான விருந்தளித்து அவர்களை அசத்தி விட்டார். இந்த விருந்தில் பரிமாறப்பட்ட விதவிதமான உணவுகளை தயாரிப்பதற்கென்றே குஜாரத்தில் இருந்து சிறப்பு வாய்ந்த சமயற்கலை வல்லுனர்களை வரவழைத்துள்ளார் ஆமீர்கான்.. ஆச்சர்யமாக தாங்கள் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆமீர் கானின் மனைவி கிரண் ராவும் இந்த விருந்தில் பங்கேற்றார்.