ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் சினிமாவில் 2010ம் ஆண்டு பாண்ட் பாஜா பாரத் என்ற படத்தில் அறிமுகமானவர் ரன்வீர் சிங். அதையடுத்து 2015 ஆம் ஆண்டு தீபிகா படுகோனே உடன் இணைந்து அவர் நடித்த பஜ்ரவ் மஸ்தானி என்ற படமும், 2019ம் ஆண்டு நடித்த கல்லி பாய் என்ற படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நடிகை தீபிகாவை திருமணம் செய்துள்ள இவர் படங்களில் பிஸியாக நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு மேகஸினுக்காக நிர்வாணமாக போட்டோ சூட் நடத்தி அதிர்ச்சி தந்துள்ளார் ரன்வீர் சிங். இது பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது.
ரன்வீர் கூறுகையில், 'நடிப்பிற்காக நான் இதற்கு முன் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன், அதில் என் ஆன்மா வெளிப்பட்டது. தற்போதும் ஆயிரம் பேருக்கு முன்னால் என்னால் நிர்வாணமாக இருக்க முடியும், ஆனால் அது அவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் அதனால் அதை நான் செய்ய மாட்டேன்' என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் சகட்டுமேனிக்கு கருத்து பதிவிட்டுள்ளனர்.