ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஹிந்தியில் சல்மான்கான் நடித்த நோ என்ட்ரி படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சமந்தா மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று சல்மான்கான் விரும்புவதாகவும் அதனால் அவர்களை அணுகி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனீஸ் பாஸ்மே இயக்கும் இப்படத்தில் அனில் கபூர் மற்றும் பர்தீன் கான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கு படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் ஹிந்தியில் உள்ள ஸ்டார் ஹீரோக்கள், தெலுங்கு ஹீரோயின்களை நடிக்க வைக்க விரும்புகிறார்கள். அந்த அடிப்படையிலேயே இந்தப் படத்தில் சமந்தா மற்றும் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.