விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான படம் லூசிபர். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மோகன் ராஜா இயக்கும் இந்த படத்திற்கு காட்பாதர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லூசிபர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது காட்பாதர் படத்தில் பிரித்விராஜ் நடித்த வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கப்போகிறார்.
காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வருகிற ஜனவரி மாதம் முதல் தொடங்கும் நிலையில் சிரஞ்சீவியுடன் தான் இணைந்து நடிக்கும் காட்சிகளை பிப்ரவரியில் படமாக்கி கொள்வதற்கு கால்சீட் கொடுத்துள்ளார் சல்மான்கான். அதனால் சிரஞ்சீவி - சல்மான் கான் இணைந்து நடிக்கும் காட்சிகளை பிப்ரவரி மாதத்தில் படமாக்குவதற்கு திட்டமிட்டு வருகிறார் டைரக்டர் மோகன் ராஜா. மேலும் இந்த படத்தில் நடிக்கும் கெஸ்ட் ரோல் மூலம்தான் தெலுங்கில் சல்மான்கான் அறிமுகமாகிறார்.