சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிசியான பாலிவுட் நடிகை ஆகிவிட்டார் ரகுல் ப்ரீத்தி சிங். தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தெலுங்கில் பெரிய படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார். இப்போது பாலிவுட் நடிகை. தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தில் நடித்துள்ளார். கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தியில் அட்டாக், டாக்டர்ஜி, மிஷன் சிண்ட்ரல்லா, படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இதுதவிர ரன்வே 34, தேங்காட், சத்ரிவலி படங்களில் நடித்து வந்தார். இதில் சத்ரிவாலி தற்போது முடிந்துள்ளது. இந்த படத்தில் ரகுல் பிரித் சிங் காண்டம் டெஸ்டர் ஆக நடிக்கிறார். வேலை இல்லாத பெண் ஒருவர் காண்டம் டெஸ்டர் வேலையில் சேர்ந்து அந்த பணியை அவர் எப்படி சவாலுடன் செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ளது. தேஜாஸ் தியோஸ்கர் இயக்கி உள்ளார்.