'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டில் முதன் முறையாக உலக கோப்பையை வென்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு 83 என்ற திரைப்படம், இந்தியில் உருவாகி உள்ளது. தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளிலும் வெளியாகிறது.
கபீர்கான் இயக்கி உள்ள இந்த படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர்சிங் நடிக்கிறார். கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கிறார்.
மது மட்டேனா, கபீர் கான் மற்றும் விஷ்ணு இந்தூரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். நாளை மறுநாள் (24ம் தேதி) படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி டில்லியில் 83 திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் வரிவிலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.