உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் | ‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு |
பாகுபலிக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண், ஜூனியர் என்டிஆருடன் பாலிவுட் நடிகை ஆலியாபட், அஜய் தேவ்கன் ஆகியோரும் நடித்துள்ளனர். தென்னிந்தியாவில் நிறைய நடிகைகள் இருக்கும்போது வட இந்தியாவில் இருந்து ஆலியாபட்டை அழைத்து வந்தது ஏன் என்று ராஜமவுலி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ஆர்ஆர்ஆர் படத்தில் நீரும், நெருப்பும் தான் பிரதானம். நீர் ராம் சரண், என்றால் நெருப்பு ஜூனியர் என்டிஆர். இந்த இரண்டையும் கட்டுப்படுத்த ஒரு சக்தி வேண்டும். அதுதான் ஆலியா. வெளியில் மென்மையாகவும், உள்ளுக்குள் வலிமையாகவும் இருக்கும் ஒரு கேரக்டருக்கு அவர் தான் பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன்.
அதற்கு காரணம் அவர் நடித்த ராஸி படம். அந்த படத்தை பார்த்த பிறகு சீதா கேரக்டருக்கு ஆலியா பொருத்தமானவராக உணர்ந்தேன். எனது படத்தில் நடிக்க ஆர்வமாக ஆலியா இருந்தது தெரியும். ஆனால் ஒரு சிறப்பு கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்ற தயக்கம் இருந்தது. கதை கேட்ட உடன் நடிக்க ஒப்புக் கொண்டார் என்றார்.
ராஸி படத்தில் ஆலியாபட் இந்தியாவுக்காக வேவு பார்க்க பாகிஸ்தான் தீவிரவாத கூட்டத்துக்கு அனுப்பப்படும் துணிச்சல்மிக்க பெண்ணாக நடித்திருந்தார்.