2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

வருகிற 24ம் தேதி வெளியாக இருக்கும் ஹாலிவுட் படம் மேட்ரிக்ஸ் 4. இந்த படத்தில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் நடித்துள்ளார். இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா. மேட்ரிக்ஸ வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது: அப்பபோது நான் இந்தியாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். எனது ஏஜெண்டிடமிருந்து ஒரு போன் வந்தது. உடனே என்னை அமெரிக்கா திரும்பும்படி அழைத்தார். நான் சான் பிரான்சிஸ்கோவில் இறங்கியதுமே ஸ்கிரிப்டைக் கொடுத்து, 'வெல்கம் டு தி மேட்ரிக்ஸ்' என்று சொன்னார்கள். எனக்கு நம்பவே முடியவில்லை. அதன்பிறகு மேட்ரிக்சின் முந்தைய பாகங்களை திரும்ப திரும்ப பார்த்து, அதில் உள்ள கேரக்டர்களை உள்வாங்கிக் கொண்டு நடித்தேன் என்றார்.