பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் |
கடந்த 3 வருடங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி, தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்தியிலும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎப் 2 படம் தயாராகி வருகிறது. இதில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 22ல் இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.
இந்தநிலையில் தற்போது இந்தப்படத்திற்கான தனது டப்பிங்கை பேசி வருகிறார் சஞ்சய் தத். இந்த தகவலை இயக்குனர் பிரசாந்த் நீல் பகிர்ந்துள்ளார். தற்போது தன்னுடைய டைரக்சனில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை கவனித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் கேஜிஎப்-2 படத்தின் மீதி பணிகளையும் கவனித்து வருகிறார் பிரசாந்த் நீல்.