2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ரவீந்திரநாத் தாகூரின் ‛3 உமன்' என்ற நாவல் மிகவும் புகழ் பெற்றது. இதில் 3 விதமான பெண்களின் வாழ்க்கையை அவர் எழுதியுள்ளார். தற்போது இந்த நாவல் திரைப்படமாகிறது. இதனை இஷிதா கங்குலி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இந்தியா, அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகிறது.
இதுபற்றி இஷிதா கங்குலி கூறியிருப்பதாவது: கொரோனா காலத்தில் இந்த படம் பற்றி ஐஸ்வர்யாவிடம் பேசினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. இதில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவரைத் தவிர மேலும் இரண்டு ஹீரோயின் கேரக்டர்கள் உள்ளன. அதில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.