தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக் கான். இவரது மகன் ஆர்யன். ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதன் காரணமாக கடந்த அக்டோபர் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து ஷாருக்கான் எந்தவித வேலையிலும் கவனம் செலுத்தவில்லை. படப்பிடிப்புக்கள், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது, கதை கேட்பு, விளம்பர படங்களில் நடிப்பது என அனைத்து வேலைகளையும் ஒத்திவைத்துவிட்டார்.
தற்போது அவரது மகன் சிறையில் இருந்து வந்துவிட்டார். ஒவ்வொரு வாரமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எனவே வழக்கமான பணிகளில் ஈடுபட ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார். தனது மகனையும் கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிறார். தான் செய்யவிருக்கும் வேலைகள் குறித்து திட்டமிடத் தெடங்கியிருக்கிறார். வரும் 15ம் தேதி ஷாருக்கான் மும்பையில் நடக்கும் பதான் படத்தின் படப்பிடிப்புகளில் பங்கேற்க இருக்கிறார். அவருடன் நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரஹாம் ஆகியோரும் படப்பிடிப்புகளில் பங்கேற்க இருப்பதாக பதான் படவேலையில் ஈடுபட்டுள்ள உதவி இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த படப்பிடிப்பு 15 முதல் 20 நாட்கள் நடக்கும் என்றும் தெரிகிறது.
இந்த படத்துக்கு பின் அட்லீ இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தேதி கொடுத்துள்ளார்.