விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
இதுநாள் வரை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்த தபுவுக்கு இப்போது காதல் வந்திருக்கிறதாம். அதுவும் வெளிநாட்டுக்காரருடன். பிரபல ஹாலிவுட் இயக்குனர் இந்திய பின்னணியில் இயக்கி வரும் படம் லைப் ஆப் பை. பெரும்பகுதி படப்பிடிப்பு பாண்டிச்சேரியில்தான் நடக்கிறது. இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் தபு. ஏற்கெனவே சில ஹாலிவுட் படங்களில் தபு நடித்திருந்தாலும் இந்தப் படம் தனக்கு பெரிய புகழை பெற்றுத் தரும் என்று நம்புகிறார். அந்த வாய்ப்பை கொடுதத்த ஆங் லீயுடன்தான் எப்போதும் காணப்படுகிறார் தபு. படப்பிடிப்புகள் முடிந்து விட்டாலும் ஆங் லீ இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தில் அவருடன்தான் நேரத்தை செலவிடுகிறார். ஆங் லீயும் எந்த நிகழ்ச்சியில் பேசினாலும், தபுவை பேரழகி என்றும் கனவு கன்னி என்றும் புகழ்ந்து தள்ளுகிறார். இருவருக்கும் இடையில் காதல் என்று பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் செய்தி கசிகிறது.