மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வேள்வி படத்தில் அறிமுகமானவர் நடிகை ஹாசினி. அதன்பிறகு நான்கைந்து படங்களில் நடித்தார். எந்த படமுமே வெற்றிபெறவில்லை. அதனால் ஹாசினியின் திறமை வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விட்டது. அவர் நடித்துள்ள விஜயநகரம் என்ற படம்கூட வெளிவர வேண்டியது இருக்கிறது. இனிமேல் சிறிய படங்களில் நடிப்பதில்லை, புது கம்பெனிகளில் நடிப்பதில்லை என்று முடிவு செய்தார். அதனால் வந்து கொண்டிருந்த வாய்ப்புகளும் நின்று போனது. இந்த நிலையில் ஹாசினி குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறி விட்டார். இதுபற்றி கேட்டால் சினிமா தொடர்பாக படிக்க அமெரிக்க கல்லூரி ஒன்றுக்கு விண்ணப்பித்து இருந்தேன். நான் நடிகை என்பதால் ஸ்காலர்ஷிப்புடன் படிக்க வாய்ப்பு கிடைத்தது. எனது உறவினர்கள் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து படிக்கிறேன். படித்து முடித்ததும் மீண்டும் இந்தியா வந்து நடிப்பேன் என்கிறார். ஆனால் ஹாசினிக்கும் அமெரிக்க சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவருக்கும் திருமணமாகிவிட்டது என்றும் அவர் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.