விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
இப்போது புகழின் உச்சியில் இருக்கிறவர் அந்த வாரிசு நடிகை. சமீபத்தில் கில்லி நடிகருடன் நடித்த படம் வெளிவந்தபோது நடிகையை வாழ்த்தி அவரது ரசிகர் மன்றம் என்ற பெயரில் வாழ்த்து போஸ்டரை நகரம் முழுக்க ஒட்டித் தள்ளிவிட்டார்கள். காரில் போகும்போது இதை கண்ணால் கண்டு பூரித்துப்போயிருந்தார் நடிகை.
அடுத்த சில நாளில் சிலர் நடிகையின் தாய்குலத்தை போனில் தொடர்பு கொண்டு "போஸ்டர் அடித்து ஒட்டின செலவு இவ்வளவு ஆச்சுது. மன்றத்துக்கு ஆபீஸ் போடலாமுன்னு இருக்கோம். அதுக்கு வாடகை இவ்வளவு ஆகுது. எப்போ வந்து பணம் வாங்கிகட்டும்" என்றார்களாம். அவ்வளவுதான் நடிகையின் தாய்கும், மலையாளம், தமிழ், ஆங்கிலம் கலந்து வெளுத்து வாங்கிவிட்டாராம். "மன்றமும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்" என்பதுதான் அவர் பேசியதின் உள்ளடக்கமாம்.