Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கையை சுட்டு கொண்டவர்களிடம், கையை பிசைந்து கொண்டு நிற்கும் மூன்றெழுத்து ஹீரோ!

23 ஜூலை, 2013 - 16:48 IST
எழுத்தின் அளவு:

அந்த தெற்கத்தி இரண்டெழுத்து இயக்குனர், மூன்றெழுத்து ஹீரோவை வைத்து இரண்டாவதாக இயக்கிய காட்டு அரசன் படம், வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களின் கையை பலமாக கடித்து விட்டதாம். அதனால் அவர்கள் கொடுத்த பில்டப்பை நம்பி பெரிய தொகையை கொடுத்து வாங்கினோம். இப்போது பெரிதாக வாங்கிக்கட்டிக்கொண்டோம் என்று பல ஏரியாக்காரர்கள் சென்னைக்கு வந்து புலம்பித்தீர்க்கிறார்களாம்.

நடந்தது என்ன? என்று விசாரித்தால், வியாபார சந்தையில் மேற்படி நடிகரின் ரேஞ்சை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த மிருகம் 2 படத்தை 88 கோடிக்கு விற்பனை செய்தார்களாம். இது அந்த சூப்பர் ஸ்டார் நடிகரின் படங்கள் விற்பனையாகும் தொகைக்கு இணையானது. ஏதோ அவர்கள் கொடுத்த விளம்பர மாயையில் மயங்கிய விநியோகஸ்தர்களும் போட்டா போட்டியில் படத்தை வாங்கியிருக்கிறார்கள். ஆனால், பல ஏரியாக்களில் ஓரிரு நாட்களிலேயே தியேட்டர்களில் ஈ ஆடியதாம்.

இதனால் வட்டிக்கு வாங்கி படத்தை வாங்கிய சிலர், தத்தளிக்கும் தங்களை கைகொடுக்குமாறு அப்படத்தை தானே தமிழகம் முழுவதும் வெளியிட்ட படத்தின் மூன்றெழுத்து நாயகனை நாடியுள்ளார்களாம். ஆனால், பணத்தை சத்தமில்லாமல் பட்டுவாடா செய்யவா? வேண்டாமா? என்று கை சுட்டுக்கொண்டவர்கள் முன்பு கைகளை பிசைந்து கொண்டு நிற்கிறாராம் உறுமல் ஹீரோ.

Advertisement
கருத்துகள் (29) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (29)

raja - TIRUPPATTUR  ( Posted via: Dinamalar Android App )
30 ஜூலை, 2013 - 23:13 Report Abuse
raja சிங்கம்2வசூல் 65கோடி
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
30 ஜூலை, 2013 - 10:01 Report Abuse
Vaal Payyan ஒரு பக்கம் வெற்றி விழா கொண்டாட்டம் ... இன்னொரு பக்கம் இவங்க கண்ணீர் என்ன நடக்குது அங்கே ...
Rate this:
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
29 ஜூலை, 2013 - 22:15 Report Abuse
GUNAVENDHAN படம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருப்பதாக கேள்வி, எந்தஒரு படத்தையும் ஏகப்பட்ட விலை கொடுத்து வாங்கிவிட்டு - இவர்கள் கனவு கண்ட அளவுக்கு வசூலை குவிக்காவிட்டால் படத்தால் நட்டம் என்று புலம்புவது காலா காலமாக நடப்பது தான். MGR , சிவாஜி காலத்தில் எல்லாம் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கு இரண்டு தியேட்டர்களில் அல்லது மூன்று தியேட்டர்களில் தான் படம் திரையிடப்படும், சுற்று வட்டாரத்தில் உள்ள 30 , 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லோரும் அந்த நகருக்கு வந்து படத்தை பார்ப்பார்கள், அடுத்த நகரத்துக்கு படம் வரவே சுமார் 2 மாதங்கள் ஆகும், சிறிய ஊர்களுக்கு படம் வர சுமாராக 7, 8 மாதங்கள் முதல் ஒரு வருடம் கூட ஆகலாம் , நிலைமை அப்படி இருந்தபோது படம் 50 நாள், 100 நாள் என்றெல்லாம் பெரிய நகரங்களில் ஓடியது. எப்போது தயாரிப்பாளர்கள் ஒரு மாவட்டத்தில் 20, 30 தியேட்டர்களில் படத்தை வெளியிட தொடங்கினார்களோ , அப்போதே ஓடும் நாட்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தமிழகத்தில் சுமார் 400, 500 தியேட்டர்களில் படத்தை திரையிட்டால் படம் எப்படி ஹவுஸ் புல் ஆகா போகும். ஒரே வாரத்தில் 500 தியேட்டர்களில் பணத்தை அள்ளி விடுவதால் , ஓடாத மாதிரித்தான் தெரியும், ஆனால் வசூல் மட்டும் ஆகிவிடும். ஆனாலும் சூர்யா படம் தங்கள் ஊரில் எவ்வளவு வசூல் ஆகும் , இதற்க்கு முந்தைய படம் எவ்வளவு வசூல் ஆனது என்கிற கணக்கையெல்லாம் போட்டு பார்த்து தான் திரையரங்க உரிமையாளர்களும் படத்துக்கு எப்.எச் நிர்ணயிக்கின்றார்கள், அல்லது எம்.ஜி நிர்ணயிக்கின்றார்கள், ஆனால் சில காத்தகம் பிடித்த திரையரங்கு உரிமையாளர்கள் தங்களை விட்டு படம் வேறு தியேட்டருக்கு போய் விடக்கூடாது , தாங்களே முழுமையாக சுருட்டிக்கொள்ள வேண்டும் என்ற அங்கலாய்ப்பில் அந்த படத்துக்கு கொடுக்கவேண்டிய தொகைக்கும் பலமடங்கு மேலாக கொடுத்து படத்தை திரையிடும் போது தான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவர்களாக விழுந்தடித்துக்கொண்டு போய் , ஓவராக கொட்டிக்கொடுத்துவிட்டு பிறகு , பணத்தை கொஞ்சமாவது திருப்பி கொடுங்கள் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கின்றது ? இவர்கள் நினைத்ததற்கும் மேலாக படம் வசூலாகி , பணம் கொட்டோ , கொட்டு என்று கொட்டியிருந்தால் இவர்கள் மேற்கொண்டு தயாரிப்பளருக்கு என்ன கொடுக்கவா போகிறார்கள். இதுவும் ஒருவகையில் சூதாட்டம் போலத்தான், சுயமாக முடிவெடுத்து பணத்தை கொடுத்து படத்தை திரையிடும் முன் ஒன்றுக்கு பத்து தடவை யோசித்திருக்க வேண்டும், இப்போது புலம்புவது சரியல்ல .
Rate this:
indsaravanan - chennai,இந்தியா
29 ஜூலை, 2013 - 15:36 Report Abuse
indsaravanan இதை தான் நான் அப்பவே சொன்னேன். தமிழ் ரசிகர்களும் தமிழ் நடிகர்களும் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மூவி மார்க்கெட் நிலவரம். தேவை இல்லாமல் இவர்கள் கொடுக்கும் பில்டப்பு தாங்க முடியவில்லை சாமீ. விஸ்வரூபம் அதற்கு முன்னர் என்தீரன் படங்களுக்கு இப்படி தான் ஓவர் பில்டப்பு கொடுக்கபட்டது. திரு கமல் ஹாசன் அவர்களிடம் சென்று கேளுங்கள் அவருடைய படம் எவ்வளவு கோடி வசூல் அவருடைய லாபம் எவ்வளவு என்று? மனிதன் வாய் திறந்து பேசமாட்டார் ஏன் என்றால் உண்மை அது தான். சிங்கம் 2 ஒப்பாரி வைக்கும் என்று முன்பே சொன்னேன். படம் ரிலீஸ் ஆகி 2 வது நாள் வெற்றி விழா கொண்டாடிய பில்டப்புக்கு என்ன சொல்றது சாமீ இனிமேலாவது இந்த பில்டப்பு தயவு செய்து நிறுத்தினால் நன்றாக இருக்கும்.
Rate this:
senthil - tamilnadu  ( Posted via: Dinamalar Android App )
29 ஜூலை, 2013 - 11:04 Report Abuse
senthil காட்டில் சிங்கம் தி்யோட்டரில் அசிங்கம்
Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in