மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ்நாட்டு தயாரிப்பு சங்கம் உருப்படியா வேலை செஞ்சு சில வருஷமாச்சுது. பதவிப்போட்டி, அதிகாரப்போட்டி, முறைகேடுகள்னு எப்போதும் பிரச்னையிலேயே இருக்குது. சங்கத்துக்குள்ள அரசியலைக் கொண்டு வந்து சங்கத்தையே கேலிக்கூத்தாக்கிட்டாங்க. கோர்ட், வழக்குன்னு மாறி மாறி போறதால சங்கத்துல பல பிரச்னைகள் தீர்க்கப்படாம கிடக்குது. முக்கியமா பெப்சியோட பேசி முடிக்க வேண்டிய சம்பள பிரச்னை கிடப்புல கெடக்கு. இதனால பெப்சி ஆளுங்க இஷ்டத்துக்கு சம்பளம் வாங்கிக்கிட்டிருக்காங்க. பெரிய தயாரிப்பாளருங்க இப்போ படமும் எடுக்கிறதில்ல. சங்கத்துக்கும் வர்றதில்ல. சின்ன தயாரிப்பாளருங்கதான் தவிச்சிட்டிருக்காங்க. அதனால "தமிழ்நாடு சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர் சங்கம்"ங்ற பெயரில் ஒரு புதிய சங்கம் தொடங்க தீவிரமா சிலர் வேலை செய்திக்கிட்டிருக்காங்க. சத்தமே இல்லாம மெம்பர்ஷ்ப்பும் சேர்த்துக்கிட்டிருக்காங்க. 2 கோடிக்குள் படம் எடுக்குற தயாரிப்பாளருங்க இதுல சேரலாம்னு சொல்றாங்க. பச்சை ஸ்டூடியோ நடத்துற ஞானமான தயாரிப்பாளர்தான் இதை முன்னால நின்னு செய்துகிட்டிருக்காராம்.