Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

திரும்பிப் பார்ப்போம் 2018 தமிழ் சினிமா : 100 தகவல்கள்

30 டிச, 2018 - 12:30 IST
எழுத்தின் அளவு:
100-cine-info-about-tamil-cinema-2018

தமிழ் சினிமாவுக்கு 2018ம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை 100 சுவாரஸ்ய தகவல்களுடன் இங்கு பகிர்ந்துள்ளோம். வாருங்கள் 2018 தமிழ் சினிமாவை திரும்பி பார்ப்போம்...

1. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ரிலீஸான படங்களின் எண்ணிக்கை 200ஐ கடந்த நிலையில், 2018ம் ஆண்டில் 181 படங்கள் மட்டுமே வ வெளிவந்துள்ளன.

2. தயாரிப்பாளர் சங்கம் படங்களை வெளியிட மறுத்து பிப்ரவரி 24 முதல் ஏப்ரல் 19 வரையில் எந்த புதுப் படங்களையும் வெளியிடவில்லை

3. சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. அதனால், டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தன.

4. தியேட்டர் கட்டணங்களுக்கு வரி விதிப்பு மாற்றம் செய்யப்பட்டதால் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பது இல்லாமல் போனது. ஆங்கிலப் பெயர்களில் படங்கள் வர ஆரம்பித்தன

5. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் காலா, 2.0, ஒரே ஆண்டில் வெளிவந்தன.

6. கமல்ஹாசன் நடித்து இந்த ஆண்டில் விஸ்வரூபம் 2 படம் மட்டுமே வெளிவந்தது.

7. அஜித் நடித்து இந்த ஆண்டில் ஒரு படம் கூட வெளிவரவில்லை.

8. விஜய் நடித்த சர்கார் படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி 250 கோடியை வசூல் செய்தது.

9. தமிழ் சினிமாவில் அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படமான 2.0 நவம்பர் 29ம் தேதி வெளியானது.

10. அதிகப் படங்களில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி, அவர் நடித்த 5 படங்கள் வெளியாகின.

11. அதிகப் படங்களில் நடித்த நடிகை வரலட்சுமி. அவர் நடித்த 5 படங்கள் வெளிவந்தன.

12. அதிகப் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சிஎ ஸ். அவரது இசையில் 8 படங்கள் வெளிவந்தன.

13. இரண்டாம் பாகப் படங்கள் அதிகமாக வெளிவந்த ஆண்டு இது, மொத்தம் 8 இரண்டாம் பாகப் படங்கள் வெளிவந்தன.

14. ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் 2.0 படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

15. குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற குலேபா.. பாடல் 8 கோடிக்கும் அதிகமான பார்வைகளை யு டியூபில் பெற்று சாதனை படைத்தது.

16. சர்கார் டீசர் 14 லட்சம் லைக்குகளைப் பெற்று, யு டியுபில் அதிக லைக்குகளைப் பெற்ற டிசர் என்ற சாதனையைப் பெற்றது. அதிகப் பார்வையிலும் 3 கோடியே 59 லட்சம் பெற்று முதலிடத்தில் உள்ள டீசர் இதுதான்.

17. நடிகர் சிவகார்த்திகேயன் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

18. மேற்குத் தொடர்ச்சி படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதியும் தயாரிப்பாளர் ஆனார்.

19. தமிழ்நாட்டில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் சர்கார் படத்திற்கு முதலிடம்

20. பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பாளர் ஆனார்.

21. உலக அளவில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் 2.0 படத்திற்கு முதலிடம்

22. நீண்ட இடைவெளிக்குப் பின் தனுஷ், யுவன் கூட்டணி சேர்ந்த படம் மாரி 2. இப்படத்தில் தனுஷுக்காக இளையராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.

23. ரகுமான் உறவினர் காஷிப் இந்த ஆண்டில் வெளிவந்த காற்றி மொழி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம்

24. இந்த ஆண்டில் 2 பெண் இசையமைப்பாளர்கள் அறிமுகம் சிவாத்மிகா (ஆண்டனி), ஜனனி (பிரபா).

25. பெண் இயக்குனர்கள் கிருத்திகா உதயநிதி இயக்கிய காளி, பிஆர் விஜயலட்சுமி இயக்கிய அபியும் அனுவும் இந்த ஆண்டில் வெளிவந்தன.

26. இந்த ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை இயக்கியவர்கள் இருவர் மட்டுமே. விஜய் (தியா, லட்சுமி), சந்தோஷ் ஜெயக்குமார் (இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த்).

27. நடிகர் விஷால், நாம் இருவர், நடிகை ஸ்ருதிஹாசன், ஹலோ சகோ மற்றும் நடிகை வரலட்சுமி உன்னை அறிந்தால் நிகழ்ச்சிகள் மூலம் டிவியில் அறிமுகம்.

28. பாபி சிம்ஹா, பார்வதி உள்ளிட்ட பலர் திரைப்பிரபலங்கள் சினிமாவின் அடுத்தக்கட்டமான வெப்சீரிஸில் களமிறங்கினர்.

29. தமிழ்ப் படங்களில் நடித்த நடிகைகள் ஸ்ரேயா, பாவனா, இஷாரா, பிரியங்கா சோப்ரா, சுவாதி, சுஜா வருணி, நடிகர் அசோக், கதிர் இந்த ஆண்டில் திருமணம்

30. பிரேமம் படப் புகழ் நடிகை சாய் பல்லவி தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம்

31. திரைத்துறையைச் சார்ந்த கலைஞர் கருணாநிதி, ஸ்ரீதேவி, சிவி ராஜேந்திரன், பாலகுமாரன் போன்ற பிரபலங்கள் மரணம் அடைந்தார்கள்.

32. நடிகர் தம்பி ராமையா, மணியார் குடும்பம் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம்

33. சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா கனா படத்தின் மூலம் பாடகியாக அறிமுகம்

34. கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதிய அருண் ராஜா காமராஜ் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம்

35. மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் அப்பா கார்த்திக், மகன் கௌதம் முதல் முறையாக இணைந்து நடித்தனர்.

36. இசையமைப்பாளர் பரணி, ஒண்டிக்கட்ட படம் மூலம் இயக்குனராக அறிமுகம்

37. சமந்தா நடித்த சீமராஜா, யு டர்ன் ஆகிய படங்கள் ஒரே நாளில் (செப்டம்பர் 13) நாளில் வெளிவந்தன.

38. சாமி 2 படத்தில் புது மெட்ரோ ரயில் பாடல் மூலம் கீர்த்தி சுரேஷ் பாடகியாக அறிமுகம்

39. அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு நடித்த இந்த ஆண்டின் ஒரே மல்டிஸ்டார் படம் மணிர த்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம்

40. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொன்டா நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகம்

41. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த முதல் படம் பியார் பிரேமா காதல் வெளிவந்தது

42. பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர் ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் படம் மூலம் நாயகியாக அறிமுகம்

43. முதன்முறையாக கமல் தயாரிக்கும் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

44. அதிக கதாநாயகிகள் நடித்த படமாக காளி படம் அமைந்தது. அந்தப் படத்தில் அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், சுனைனா, அம்ரிதா என நான்கு கதாநாயகிகள் நடித்தனர்

45. காலா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி அறிமுகம்

46. நீண்ட இடைவெளிக்குப் பின் ஹிந்தி நடிகர் நானா படேகர் தமிழ்ப் படமான காலா படத்தில் நடித்தார்

47. அரவிந்த்சாமி ஜோடியாக முதல் முறையாக செக்கச் சிவந்த வானம் படத்தில் ஜோதிகா நடித்தார்.

48. நடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து அறிவிப்பு

49. சமூக வலைத்தளங்களில் இந்த வருடத்திலும் அஜித், விஜய் ரசிகர்களின் மோதல் தொடர்கிறது

50. நீளமான தலைப்பு கொண்ட படமாக எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படம் வெளியானது

51. தேதியைத் தலைப்பாகக் கொண்ட படங்களாக டிசம்பர் 13, 18-05-2009 ஆகிய படங்கள் வெளியானது

52. எண்களையும் தலைப்பாகக் கொண்ட படங்களாக 96, 2.0 ஆகிய படங்கள் வெளியாகின

53. இதற்கு முன் வெளிவந்த படங்களின் தலைப்புகளை வைத்து “சாவி, குலேபகாவலி, சரணாலயம், மதுரை வீரன், வீரா, காளி, டிக் டிக் டிக், அண்ணனுக்கு ஜே, ஜானி” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன

54. கோலமாவு கோகிலா படத்தின் க ல்யாண வயசு பாடல் மூலம் சிவகார்த்திகேயன் பாடல் ஆசிரியராகவும் அறிமுகம்

55. ஆங்கிலப் பெயர்களில் ஸ்கெட்ச், மெர்க்குரி, டார்ச்லைட், யு டர்ன், நோட்டா, ஜீனியஸ்” ஆகிய படங்கள் வெளிவந்தன

56. மன்னர் வகையறா படத்தின் மூலம் நடிகர் விமல் தயாரிப்பாளராக அறிமுகம்

57. ஜருகண்டி படத்தின் மூலம் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகம்

58. நடன இயக்குனர் தினேஷ் ஒரு குப்பைக் கதை படத்தில் நாயகனாக அறிமுகம்

59. நடிகை காயத்ரி, 96 படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார்

60. மீ டூ சர்ச்சையை எழுப்பினார் பின்னணிப் பாடகி சின்மயி. வைரமுத்து மீது காரசாரமான புகார். அதைத்தொடர்ந்து நிறைய பேர் மீடூ புகாரில் சிக்கினர்.

61. வட சென்னை படத்தில் இடம் பெற்ற கெட்ட வார்த்தையால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது

62. சந்தானம் நடித்து இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளிவரவில்லை

63. சர்கார் படத்தில் அரசின் இலவசங்களைக் கிண்டல் செய்ததாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மீது வழக்கு

64. சர்கார் பட கதை விவகாரம் குறித்து எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் பகிரங்க குற்றச்சாட்டு, ராஜினாமா நடந்தேறி, மீண்டும் பதவியேற்பு

65. நரகாசூரன் படத் தயாரிப்பு விவகாரத்தில் இயக்குனர் கவுதம் மேனன் மீது இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் புகார்

66. இயக்குனர் சுசீந்திரன் மீது ஒளிப்பதிவாளர், நடிகர் நட்ராஜ் சுப்பிரமணியம் குற்றச்சாட்டு

67. ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க மூன்று இயக்குனர்கள் போட்டி. பெண் இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா படத்தில் ஜெயலலிதாவாக நடிகை நித்யா மேனன் நடிக்கிறார்

68. தம்பி கார்த்தி நாயகனாக ந டிக்க அண்ணன் சூர்யா தயாரித்த கடைக்குட்டி சிங்கம் படம் வெளியானது

69. 2.0 படம் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியாகி 200 கோடியை வசூலித்தது

70. பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகை ரித்விகா தேர்வு செய்யப்பட்டார்

71. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சௌதி அரேபியாவில் வெளியான முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை காலா படம் பெற்றது

72. பிரியதர்ஷன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க பிரகாஷ்ராஜ் நடித்த சில சமயங்களில் படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நெட்பிளிக்ஸ்-ல் வெளியானது

73. தெலுங்கு நடிகர் நாக சௌரியா தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்

74. ஒரே ஆண்டில் அறிமுகமாகி இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த நாயகி என்ற பெருமையை ராஷி கண்ணா பெறுகிறார். அவர் நடித்து வெளிவந்த படங்கள் இமைக்கா நொடிகள், அ டங்க மறு.

75. ஹிந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்,இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக அறிமுகம்

76. மலையாள நடிகர் டொவினோ தாமஸ், தமிழில் அபியும் அனுவும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி இரண்டாவது படமான மாரி 2வில் வில்லனாகவும் நடித்தார்

77. அதிகப் படங்கள் வெளிவந்த மாதம் ஆகஸ்ட். மொத்தம் 27 படங்கள். குறைந்த படங்கள் வெளிவந்த மாதம் மார்ச், ஒரே ஒரு படம் வெளியானது.

78. அப்பா அர்ஜுன் இயக்க மகள் ஐஸ்வர்யா நடிக்க சொல்லிவிடவா என்ற படம் வெளிவந்தது.

79. விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி வெளிவந்தது

80. 100 நாள் ஓடிய படம் என இமைக்கா நொடிகள், கடைக்குட்டி சிங்கம், மன்னர் வகையறா, திருவிக பூங்கா ஆகிய படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன

81. “தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், கலகலப்பு 2, கோலமாவு கோகிலா, நாச்சியார், வனபத்ரகாளி, காலா, செக்கச் சிவந்த வானம், பரியேறும் பெருமாள், ராட்சசன், சர்கார், வட சென்னை, டிக் டிக் டிக், தமிழ்ப் படம் 2,” ஆகிய படங்கள் 50 நாட்களைக் கடந்த ஓடின.

82. திருமணத்திற்குப் பின்னும் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடித்து இந்த ஆண்டில் இரும்புத் திரை, சீமராஜா, யு டர்ன் ஆகிய படங்கள் வெளிவந்தன.

83. தெலுங்கு நடிகர் நாகபாபு மகள் நிஹாரிகா, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகம்

84. வாரிசு அறிமுகங்களில் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி, டிக் டிக் டிக் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

85. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு நடிகையர் திலகம் என்ற பெயரில் தெலுங்கிலிருந்து டப்பிங் ஆனது. படம் தமிழில் எடுக்கப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமளித்தது.

86. காப்பிரைட், ராயல்டி விவகாரங்களில் இளையராஜாவைப் பற்றிய சர்ச்சை மீண்டும் எழுந்தது

87. செல்பி எடுக்க வந்தவரின் போனைத் தட்டி விட்டதால் நடிகர் சிவகுமார் மீது சமூக வலைத்தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்

88. கடந்த ஆண்டுகளில் முன்னணி நடிகைகளாக இருந்த லட்சுமி மேன், ஸ்ரீதிவ்யா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்த படங்கள் ஒன்று கூட இந்த ஆண்டு வெளிவரவில்லை

89. தனுஷ் நடித்த ஆங்கிலம், மற்றும் பிரெஞ்ச் படமான தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் த பாகிர் படம் வெளிவந்து, வரவேற்பைப் பெறாமல் போனது.

90. யு டியூபில் வெளியான மோஷன் போஸ்டர்களில் அதிக பார்வைகளைப் பெற்ற படம் என்ற சாதனையை விஸ்வாசம் பெற்றது. ஒரு கோடியை நெருங்குகிறது அந்த போஸ்டரின் பார்வைகள்

91. அஜித்தின் விஸ்வாசம் படம் மூலம் முதன் முறையாக இசையமைத்துள்ளார் இமான்

92. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கிறார். வினோத் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டில் வெளியாகும்

93. இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் ஆரம்பமாகி குறுகிய காலத்தில் நிறைவுற்றது. 2019 பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது.

94. ஸ்டிரைக் நாட்கள் தவிர மற்ற அனைத்து வாரங்களிலும் புதிய படங்கள் வெளிவந்தன. ஒரே நாளில் அதிகமாக வந்த படங்கள் என்ற பெருமையை ஆகஸ்ட் 3ம் தேதி பெற்றது. அன்றைய தினம் 10 படங்கள் வெளிவந்தன.

95. ஹன்சிகா நடிக்கும் 50வது படமான மஹா போஸ்டரில், புகைப்பிடிப்பது, காவி உடை போன்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

96. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக இருந்த ஆர்.கே.சுரேஷ், உதயா, இருவரும் விஷால் மீதான அதிருப்தியில் பதவி விலகினர்.

97. தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிர்ப்பாளர்கள் பூட்டு, நீதிமன்றம் சென்று பூட்டைத் திறந்தார் சங்கத் தலைவர் விஷால்.

98. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவுதம் மேனனுக்கு பதிலாக துணை தலைவராக பார்த்திபன் நியமனம்.

99. சிம்பு மீது வல்லவன் படத் தயாரிப்பாளர் குற்றச்சாட்டு, அவரால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து இன்னும் மீளவில்லை என படத் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் குற்றச்சாட்டு.

100. ஆண்டின் இறுதியில் ரஜினியின் பேட்ட படம் டிரைலர் ரிலீஸாகி, ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி இளமையான தோற்றத்திற்கு மாறி நடித்ததே காரணம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2018 : தமிழ் சினிமாவும்... சந்தித்த பிரச்சினைகளும்..!2018 : தமிழ் சினிமாவும்... சந்தித்த ... 2018 - வசூலில் சாதனை படைத்த டாப் 5 படங்கள் 2018 - வசூலில் சாதனை படைத்த டாப் 5 படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in