ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து | மம்முட்டி, மோகன்லால் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | 30 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா ஜப்பான் பயணம் | பிளாஷ்பேக்: 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் ஆன தெலுங்கு படம் | மொபைல் எண் விவகாரம் : 'அமரன்' குழுவுக்கு மாணவர் நோட்டீஸ் | 'ஏஞ்சல்' பட விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: திடீர் வில்லன் ஆன எம்.ஜி.ஆர் | அமராவதியில் 'கேம் சேஞ்சர்' விழா : பவன் கல்யாண் வருவாரா? | 'சிறகடிக்க ஆசை' கோமதி ப்ரியா க்யூட் கிளிக்ஸ் | ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் பாடப் போகும் சைந்தவி |
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகியானவர்களில் இவரும் ஒருவர். டிவி சீரியல்கள், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் 'அயோத்தி' படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. அதன் பிறகு தெலுங்கு, தமிழ், மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து கொண்டுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள 'கிஸ்' படத்தில் கவினுடன் படு பிஸியாக நடித்து வருகிறார்.
தாய்மொழி சிந்தியாக இருந்தாலும் துாய தமிழில் பேசி மயக்க வைக்கிறார். ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கிலும் சரளமாக பேசுகிறார் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் பேசினோம். அவரே தொடர்கிறார்...
அப்பா ஷாம் குமார், அம்மா கிஷோரி தேவி. அக்கா அஞ்சு அஸ்ராணி. குஜராத் எங்கள் பூர்விகம். அப்பாவின் தொழில் விஷயமாக ஐதராபாத்தில் குடியேறினோம். பள்ளி, கல்லுாரி படிப்பை இங்கு தான் முடித்தேன். இங்கு குடியேறியதால் தெலுங்கு மொழி அத்துப்பிடி.
பள்ளியில் படிக்கும் போது குழந்தை நட்சத்திரமாக ஒரிரு படங்களில் தலைகாட்டியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பும் கிட்டியது. அதன் மூலம் பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் 'பிரஷர்குக்கர்' என்ற தெலுங்கு படத்தில் தான் நாயகியானேன்.
தமிழ், தெலுங்கு டிவி சீரியல்களில் நடித்து வந்தேன். தமிழில் மின்னலே டிவி சீரியல் பிரேக் கொடுத்தது. இந்த நேரத்தில் இயக்குனர் மூர்த்தி, அயோத்தி படத்தில் சசிக்குமாருடன் நடிக்கிறீர்களா என்றார். உடனே ஓ.கே., சொல்லி விட்டேன்.
பல படங்களில் நடித்திருந்தாலும் முதல் தமிழ் படத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்க போகிறோம் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பின் போது சசிக்குமார், மூர்த்தி தைரியம் கொடுத்து நடிக்க வைத்தனர். அயோத்தி படம் வெளியான முதல் இரு நாட்கள் சரியாக ஓடாததால் ஐதராபாத்தில் இருந்த எனக்கு சங்கடமாகவும் இருந்தது. மூன்று நாட்கள் கழித்து படம் பெரிய ஹிட் ஆனதை கேள்விபட்ட பிறகு தான் நிம்மதி வந்தது. அயோத்தி படக்குழுவினரை ரஜினி நேரில் அழைத்து பாராட்டினார். முதல் படத்திலேயே அவரிடம் நேரில் பாராட்டு பெற்றதை வாழ்க்கையில் மறக்க முடியாது.
என் ரோல் மாடல் அக்கா அஞ்சு அஸ்ராணி தான். அவர் அயோத்தி படத்தில் எனக்கு அம்மாவாக நடித்திருந்தார். அக்கா தெலுங்கில் வெங்கடேஷ், பவன்கல்யாணுடன் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். நிஜத்தில் இருவருமே ரொம்ப அட்டாச்சாக இருப்போம். நிழலிலும் (படத்திலும்) அட்டாச்சாக நடித்தது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.
அயோத்தி படத்துக்காக மதுரையில் ஒரு மாதம் முகாமிட்டிருந்தேன். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. இப்போதும் மதுரை வந்தால் முதலில் செல்வது அங்கு தான். மதுரை மக்களின் பாசம், வரவேற்பு திக்குமுக்காட செய்தது. படப்பிடிப்பு இடங்களில் பாசத்தை கொட்டி தீர்த்தனர். தமிழ் மீது பெரிய லவ் இருக்கிறது. தற்போது மலையாளத்தில் நடிப்பதால் அந்த மொழியையும் கற்று வருகிறேன் என அழகு தமிழில் பேசினார்.