ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இணையதளத்தை திறந்தால், இவர் இம்சையில்லாத இடமில்லை. "இளசுகளின் இம்சை அரசனாக திடீர் பதவி உயர்வு பெற்ற இவர், இந்த கடுமையான "பவர் கட்டிலும், "பவர் ஸ்டார் என்ற பட்டத்தை சுமந்து, புழுக்கத்தில் இருப்போரை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். "லத்திகாவில் தொடங்கிய இவரது ஹீரோ பயணம், "சிம்புக்கு நான் தாண்டா தொல்லை... ஆனந்த தொல்லை... என, இளம் நடிகர்களுக்கு, திரையில் சவால் விடும் அளவிற்கு தற்போது உச்சத்தில் கொண்டு போயுள்ளது.
அடுத்தடுத்து சர்ச்சைகள் வந்தாலும், இவரை மொய்க்கும் ரசிகர் கூட்டம் (எப்படி வந்தது எனக்கேட்கக்கூடாது) குறைந்தபாடில்லை. இனியும் தேவையில்லை "சஸ்பென்ஸ். "பெரியது ஈபிள் டவரு, கல்யாணத்துக்கு மொய் கவரு, இடியாது சீனா சுவரு, காரணம் எங்க பவரு... என, மொக்கையர்களின் துதிபாடலை பொருட்படுத்தாமல், அவர்களையும் சிரிக்க வைத்து மகிழும் சீனிவாசன், தன் "கலகல பேட்டியால், உங்களை கலகலப்பாக்க போகிறார் வாருங்கள்:
* நீங்க மதுரை பவராமே?
"நானும் மதுரைக்காரன் தாண்டா... (விஷால் டயலாக் பாணியில் கூறினார்). வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி தான் நம்ம ஏரியா. அப்பா, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். படித்தது சேதுபதி பள்ளி. 20 வயது வரை, மதுரையில் தான் குப்பை கொட்டினேன்.
* நான்கு வயசுக்கு முன்னாடி தான், மதுரையிலிருந்து கிளம்பினீங்களா?
ஹி...ஹி... ஹி...
* காமெடிக்கு போனதால, உங்க "பைட் பார்க்க முடியலைன்னு ரசிகர்கள் "பீல் பண்றாங்களே!
காமெடியைத் தான் மக்கள் இப்போ ரசிக்கிறாங்க. சமீபமா, காமெடி கதைகள் தான் "ஹிட் ஆகுது. நான் திரையில் வந்தாலே, என் ரசிகர்கள் ரசிப்பார்கள்.
* "சீனிவாசனின் அடுத்த பட(ல)ங்கள் என்ன?
நான் ஊறுகாய்... நீ சரக்கு, யா... யா...யா..., சும்மா நச்சுன்னு இருக்கு.
* கேட்கக் கூடாததை கேட்டுட்டேனா... ஏன் கோபப்படுறீங்க?
ஹலோ... சத்தியமா என் படத்தோட பேருங்க! எல்லாமே காமெடி "சப்ஜெக்ட். ஜூன் மாதத்திற்கு பிறகு "பவர் இல்லாத படமே இல்லை.
* அடுத்த படத்துலயாவது உங்க காதல் "சக்சஸ் ஆகுமா?
ரசிகர்கள் கேட்குறாங்க! "நான் ஊறுகாய், நீ சரக்கு படத்தில் கேரளாவின் முன்னணி குத்தாட்ட நடிகை "ருக்கு தான் எனக்கு ஜோடி(கேரளாவில் எல்லாம் குத்தாட்டம் இருக்கா என்ன?) "ரொமான்ஸ்ல புகுந்து விளையாடியிருக்கோம். படம் வந்ததும், பாருங்க...
*"டக்குனு ஒரு ரியல் "பஞ்ச் அடிங்க...
"சினிமாவில் யாரும் நிரந்தரம் இல்லை. இப்போ எனக்கு மவுசு இருக்கு. நடிக்கும் வரை மேடை; முடிஞ்சதும்,கீழே இறங்கிடனும், ("பஞ்ச் கேட்டா காமெடி பண்றாரே).
* பவர் ஸ்டாருக்கு, சூப்பர் ஸ்டார் ஆசை ஏன்?
என் ரசிகர்கள் தான் ஆசைப்படுறாங்க(ஹி...ஹி...ஹி...) நான் என்ன செய்யுறது. காலத்தின் கட்டாயம் எதுவோ, அதுபடி
நடக்கட்டும்(நீங்களுமா....).
* நடிகர்களை வரிசைப்படுத்தினால், பவருக்கு எந்த இடம்?
ரஜினி, ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து, கட்டாயம் "பவர் இருப்பான். எனக்கு நிகர், நான் மட்டுமே. சந்தானம், என் தம்பி (இப்படித்தான் அவசரப்பட்டு வயசை உடைக்கிறதா...)
* சீனிவாசன் உங்க பேரு, "பவர் ஸ்டார்ங்கிறது படிச்சு வாங்கிய பட்டமா?
(பளார்... பளார்... பளார்... ரியாக்ஷனுக்கு பின்) "லத்திகா வெற்றி விழாவில் பங்கேற்ற திருமாவளவன், என் ரசிகர் கூட்டத்தை கண்டு வியந்து, "பவர் ஸ்டார் பட்டம் சூட்டினார், என,பேசிக்கொண்டிருந்த போதே... "நாளைய ஜனாதிபதி பவர் ஸ்டார்... அமெரிக்க அதிபர் பவர் ஸ்டார்... ஆஸி., பிரதமர் பவர் ஸ்டார்... என, உரக்க ஒலித்து ரசிகர்களின் குரல் நோக்கி நகர்ந்தார் பவர்.
"தலைவா... நீ தான் தமிழ், உன்னை எதிர்த்தா டுமீல்... போன்ற வசன மழை பொழிந்தனர் சிலர். "தம்பி... நீங்க எல்லோரும் என் "மைண்ட்ல இருக்கீங்க... பெத்தவங்க தான் "பர்ஸ்ட், பவர் "நெக்ஸ்ட் என, சிரிக்காமல் சிரித்து அவர்களுக்கும், நமக்கும் விடை கொடுத்தார்.