சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தமிழக அரசியலில், டுவிட்டர் மூலமாக, அவ்வப்போது அணுகுண்டுகளை வீசி வருகிறார், நடிகர் கமல் ஹாசன். ஆனால், அவரது இளைய மகள் அக் ஷராவோ, பரபரப்பு எதுவுமில்லாமல், தமிழ் திரைப்படங்களில் முத்திரையை பதிக்க தயாராகி வருகிறார். விவேகம் படத்தின் மூலம், தமிழில் முதல் முறையாக முகம் காட்டும் அக் ஷராவுடன் ஒரு அரட்டை.
அஜித் படத்தில் அக் ஷராவுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?
இயக்குனர் சிவாவை சந்தித்த போது, அவர் கூறிய கதை எனக்கு பிடித்திருந்தது. படம் முழுவதும் அஜித்துடன் பயணிக்கும் கேரக்டர் அது. படத்தின் திருப்புமுனை கேரக்டரும் அது தான். இயக்குனர் கதை கூறியதும், அந்த ரோல், என் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. இதனால், படத்தில் நடிக்க, உடனடியாக சம்மதித்தேன்.
அஜித் பற்றி?
அஜித், ரொம்ப நல்ல மனிதர். பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பு நடக்கும் போது தான், அவரை சந்தித்தேன். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், அங்குள்ள இயற்கை காட்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, அஜித் சார் அங்கு வந்து, அக் ஷரா ஜி என, அழைத்தார். எனக்கு ஆச்சரியமாகி விட்டது. எவ்வளவு பெரிய மனிதர், நம்மை, ஜி என அழைக்கிறாரே என, ஆச்சரியப்பட்டேன்.
படப்பிடிப்பில், அஜித், உங்களுக்கு எந்த அளவுக்கு உதவினார்?
ஒருசில காட்சிகளில் சரியாக நடிக்க முடியாமல் திணறினேன். 20 டேக்கிற்கு மேல் போனதால், பதற்றமானேன். அஜித் சார், என்னிடம் வந்து, இவ்வளவு டென்ஷனாக வேண்டிய அவசியமே இல்லை. பொறுமையாக பண்ணலாம்; உங்களால் முடியும் என, தைரியம் கொடுத்தார்.
சினிமா ஆர்வம் எப்படி வந்தது?
கடந்த, 2009ல், மும்பைக்கு போய்விட்டேன். படிப்பை விட்டாச்சு, இனி என்ன செய்யலாம் என, யோசித்தேன். அப்போது தான், சினிமா மீது ஆர்வம் வந்தது. அப்பா, அம்மாவிடம் ஐடியா கேட்டேன். உதவி இயக்குனராக பணியாற்றினால், சினிமாவில் உள்ள எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்ளலாம் என, அவர்கள் கூறினர். இதனால், உதவி இயக்குனராக சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்புறம், விளம்பர படங்களில் பணியாற்றினேன்; ரஷ்ய நடனத்தையும் கற்றேன். அப்படியே, சினிமாவுக்கு நடிக்க வந்து விட்டேன்.
அக்கா ஸ்ருதி பற்றி?
கடினமான உழைப்பாளி; அதே சமயம், ரொம்ப நேர்மையாக இருப்பாங்க; அவங்களை பார்த்து, பெருமைப்படுகிறேன்.
வீட்டில் இருவரும் எப்படி?
எல்லாருடைய வீட்டிலும், அக்கா, தங்கையிடையே என்ன நடக்குமோ, அதே தான் எங்கள் வீட்டிலும் நடக்கும். அடிக்கடி சண்டை போடுவோம்; ஜாலியாக இருப்போம். என் உடைகளை, அக்கா எடுத்துட்டு போயிடுவாங்க. அதே போல், அக்கா உடைகளை நான் பயன்படுத்துவேன். இரண்டு பேரும், கொடைக்கானலுக்கு அடிக்கடி போவோம். அங்கு, எங்கள் உறவினர் வீடு இருப்பதால், ஜாலியா சுற்றுவோம்.
மும்பை - சென்னை வாழ்க்கை எப்படி?
மும்பையில் என்னை யாருக்கும் அதிகம் தெரியாது; அப்படியே தெரிந்தாலும், கண்டுக்க மாட்டாங்க. ஆனால், சென்னையில், கமல் பொண்ணு என்ற அடையாளம் எனக்கு இருக்கு. சென்னை மக்கள் என்னிடம் காட்டும் அன்பில், பலமுறை நெகிழ்ந்து போயிருக்கிறேன்.
அப்பா அரசியலுக்கு வரணும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கா?
அப்பா என்ன முடிவு எடுத்தாலும், என்னுடைய முழு ஆதரவு எப்போதுமே அவருக்கு உண்டு. என்ன சொல்ல வேண்டுமானாலும், அதை அப்பாவிடம் பகிரங்கமாக சொல்வோம். அவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.
உங்களுக்கும், அக்காவுக்கும் காதல் கல்யாணமா அல்லது...