கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி |

'நாட்டாமை' படத்துல அந்த சிறுவன் பேசும் வசனம் இன்னும் மக்கள் மனசுல நீங்கா இடம் பெற்று இருக்கும். குழந்தை நட்சத்திரமாக, சுறு,சுறுப்பான நடிப்பால், பக்கத்து வீட்டு சிறுவனின் நினைவை நமக்கு ஏற்படுத்தி, தேசிய விருது என பல விருதுக்கு சொந்தக்காரர். சினிமாவில் படிப்படியாக வளர்ந்து, 'விழா' படம் வாயிலாக ஹீரோ ஆனார், மாஸ்டர் மகேந்திரன். பொள்ளாச்சியில் படப்பிடிப்புக்காக வந்துள்ள அவர், தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதில் இருந்து...
சினிமா பயணம் எப்படியிருக்கு!
சிறு வயதில் இருந்து இதுவரை, 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். தமிழ், மலையாளம் என, ஆறு மொழிகளில் நடித்துள்ளேன். இந்த நீண்ட பயணத்துக்கு காரணம் நான் மட்டுமல்ல; என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க வைத்த டைரக்டர்; தயாரிப்பாளர்கள் தான். சினிமா தான் என் உயிர்; சினிமாவை எனது அம்மாவாக பார்க்கிறேன். சாதிக்க நினைக்கறவங்கள கடவுள் அதிகளவு பயணம் செய்ய வைப்பார்.
ஹீரோவாக நடித்த படங்கள் ஜெயிக்கவில்லையே!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதால், என்னை பலருக்கும் தெரியும். ஆசையாக வந்து, நீ ஹீரோவாக நடிக்கணும், என, அழைக்கும் போது, என்னால் மறுக்க முடியவில்லை. ஒன்லைன் கதை கேட்டு நடித்தேன். ஒரு நம்பிக்கையில் நடித்தேன். அது மக்களுக்கு பிடிக்காமல் போய் இருக்கலாம். தற்போது கூட, 'மாஸ்டர்' படத்தில் அந்த நம்பிக்கையில் தான் நடித்தேன்; மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
'மாஸ்டர்' அனுபவம் பற்றி...
'மாஸ்டர்' படம் எனது சினிமா பயணத்தில் முக்கியமான மைல்கல். ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அண்ணன்கள் விஜய் மற்றும் விஜய்சேதுபதியிடம் நடித்தது மகிழ்ச்சியாக இருந்ததுடன், நிறைய விஷயங்களை கற்க முடிந்தது. சினிமாவில் ஜெயிக்க நினைக்கிறவங்க, லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க வேண்டும். இவங்க எல்லோருடன் இணைந்து பணியாற்றிய மாஸ்டர் படம் மறக்க முடியாத அனுபவம்.
மாஸ்டருக்கு பிறகு...
இந்த படம், என் சினிமா பயணத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. இதனை அப்படியே பிடித்து, அடுத்த நிலைக்கு செல்வேன். இனி வரும் படங்கள், ரசிகர்களை கவரும் வகையில் அமையும். தற்போது கூட ஒரு பெரிய பட்ஜெட் படத்துல, நடிகர் தனுஷ் உடன் நடிக்க உள்ளேன்.
சினிமா என்ட்ரிக்கு உங்களது 'டிப்ஸ்!'
உடல், மனதளவில் தயராக இருக்க வேண்டும். சினிமா பற்றி தெரிந்து இருக்க வேண்டும். காசு இருந்தால் ஜெயித்து விடலாம், என்ற எண்ணத்துடன் வந்து விட வேண்டாம். திறமை இருந்தால் மேலே வர முடியும். எனது, 30 ஆண்டு பயணமே அதற்கு சான்று. கோடம்பாக்கம், பாண்டிபஜாருக்கு சினிமா வாய்ப்புக்காக தேடி வரும் இளைஞர்கள் கூட்டம் அதிகளவு இருக்கும். இங்கு இருந்து தான், பல நடிகர்கள் உருவாகி உள்ளனர். இந்த இடம் எனக்கு ஒரு கோவில் போன்றது.
ரஜினி, விஜய் போன்றோர் புதிய டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்களே!
புதியதாக வரும் டைரக்டர்கள் திறமையை வெளிப்படுத்திக் கொள்ள, ரஜினி, விஜய் வாய்ப்புகளை வழங்குகின்றனர். அவர்களும் இளைஞர்களை கவரும் வகையில் படங்களை எடுக்க துவங்கியுள்ளனர்.
வருங்காலம்... ஓடிடியா, தியேட்டரா?
'ஓடிடி' மொபைல்போன் போன்றது; மொபைல்போனில் சினிமா பார்ப்பதை விட, தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது ஏற்படும் அனுபவம் தனி சுகம். என்னதான் நவீன டெக்னாலஜி வந்தாலும், தியேட்டரில் படம் பார்த்தால் தான் மகிழ்ச்சி கிடைக்கும்.