பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா | 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா | பிளாஷ்பேக்: எக்ஸ்பிரஸ் கவிஞர் | 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத் | நுரையீரல் பிரச்னை : கன்னட நடிகை ரஷ்மி லீலா மரணம் | நுகர்வு, சுவை திறனை இழந்த மம்முட்டி | 'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் |

சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் குஷ்பு. கடைசியாக லஷ்மி ஸ்டோர்ஸ் தொடரில் நடித்தார். தற்போது கலர்ஸ் டிவிக்காக 'மீரா: ஒரு புதுக்கவிதை' என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். இதன் கதாசிரியராகவும் பணியாற்றுகிறார்.
இந்த தொடர் வருகிற 28ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த தொடரின் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் குஷ்புவுடன் சுரேஷ் சந்திர மேனன், பூஜா லோகேஷ், ஈஸ்வர் ரகுநாதன், அரவிந்த் கதிர், அண்ணபூரணி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஜவஹர் இயக்குகிறார், அவ்னி டெலிமீடியா சார்பில் குஷ்பு தயாரிக்கிறார். குடும்ப வன்முறைகளை துணிச்சலுடன் எதிர்த்து போராடும் குடும்ப பெண்ணின் கதை.




