பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான விஜே என்றால் அது ஆனந்த கண்ணன் தான். நிகழ்ச்சியை நேர்த்தியாகவும், இளைய தலைமுறைக்கு பிடித்த டிரெண்டிங்கிலும் தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து பல சினிமா நிகழ்வுகள், ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். இதற்கிடையே அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சினிமா வாய்ப்பு ஆனந்த கண்ணனுக்கு தொடர்ந்து சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக இல்லை. அதன்பிறகு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழ் கிராமிய கலைகளை 'ஆனந்த கூத்து' என்ற அமைப்பின் மூலம் கற்றுக் கொடுத்து வந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன், கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது 48-வது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது 49 வது பிறந்தநாள் அண்மையில் வந்தது. அன்று அவரது மனைவி ராணி கண்ணன், 'எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' என பதிவிட்டிருந்தார். முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதியும் 24-வது திருமண நாளை 'நீ விட்டு சென்ற காதலுடன் வாழ்கிறேன்' என பதிவிட்டிருந்தார். ராணி கண்ணனின் பதிவை பார்க்கும் ரசிகர்களும், நண்பர்களும் மிகவும் எமோஷனலாகி ஆனந்த கண்ணனை நினைத்து உருகி வருகின்றனர்.