ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் ஆளாக எலிமினேட் ஆகி வெளியே சென்றவர் சுரேஷ் சக்கரவர்த்தி. இருப்பினும் வைல்டு கார்டு என்ட்ரியாக கம்பேக் கொடுத்து இளைஞர்களுக்கு இணையாக டஃப் கொடுத்து விளையாடி வந்தார். தற்போது பிக்பாஸ் வீட்டில் நல்ல பொசிசனில் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி மேலும் சில வாரங்கள் தாக்குப்பிடித்து விளையாடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அவரது உடல்நலக்குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இது தொடர்பில் வெளியான வீடியோவில் பிக்பாஸிடம் பேசும் சுரேஷ் சக்கரவர்த்தி 'என்னுடைய 60 வது பிறந்தநாளை பிக்பாஸ் வீட்டில் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்காமல் வெளியே செல்கிறேன். ஒருவேளை 5வது முறையாக திரும்பி வந்தாலும் வருவேன். பிக்பாஸ் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சியே' என உணர்ச்சிகரமாக பேசியிருந்தார். பிக்பாஸ் ஹவுஸ் மேட்டுகள் அனைவரிடமும் சந்தோஷமாக விடை பெற்று அவர் வெளியேறும் போது, உடம்பு தான் முக்கியம் என சக ஹவுஸ்மேட்டுகள் அவருக்கு அட்வைஸ் செய்து வழியனுப்பி வைத்தனர்.