23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகையாக உள்ள இந்துஜா, 'மேயாத மான்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அந்த படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் விஜய்யின் 'பிகில்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். வேம்பு கதாபாத்திரத்தில் நடித்த இந்துஜாவுக்கு, நல்ல அறிமுகம் கிடைத்தது.
தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் 'காக்கி' படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா போட்டோஷூட்டுகளை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைபடத்தை கண்ட ரசிகர்கள் இவர் அதில் படு ஒல்லியா இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.