ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ் | பிபியை எகிறச் செய்யும் சிவானியின் பேரழகு | குமரிப்பெண், முதல் நீ முடிவும் நீ, காஞ்சனா 2 - ஞாயிறு திரைப்படங்கள் | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாக்ஷி அகர்வால் | ஸ்ருதி சண்முகப்ரியாவின் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள் வைரல் | சித்ரா மாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு : நக்ஷத்திரா பற்றி பகீர் கிளப்பும் ஸ்ரீநிதி விஜய் | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட நாயகி | மன்சூரலிகானிடம் ரூ. 50 லட்சம் மோசடி | சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் - அக்சய்குமார் லுக் வெளியானது | மே 30ல் ‛யானை' டிரைலர் |
தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகையாக உள்ள இந்துஜா, 'மேயாத மான்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அந்த படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் விஜய்யின் 'பிகில்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். வேம்பு கதாபாத்திரத்தில் நடித்த இந்துஜாவுக்கு, நல்ல அறிமுகம் கிடைத்தது.
தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் 'காக்கி' படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா போட்டோஷூட்டுகளை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் நடிகை இந்துஜா, தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை மகிழ்ந்துள்ளார். இந்த அழகிய தருணங்களை புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இந்துஜா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.