'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'மேயாதமான்' படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்துஜா. அதன்பிறகு 60வயது மாநிறம், பில்லா பாண்டி, மகாமுனி, பிகில், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக நானே வருவேன் படத்தின் தனுஷ் ஜோடியாக நடித்தார். தற்போது காக்கி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்துஜா நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் 'பார்க்கிங்'. சோல்ஜர்ஸ் பேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை பலூன் படத்தின் இணை இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் தவிர எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் நடிக்கிறார்கள். சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை சுற்றி மும்முரமாக நடந்து வருகிறது. த்ரில்லர் ஜார்னில் உருவாகும் படம்.