'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் |
2006ம் ஆண்டு போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி தமிழில் கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சிங்கம் 2, இறைவி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்தார். அறிமுகமாகி 19 ஆண்டுகளில் 49 படங்களில் நடித்துள்ளார். அவரின் 50வது படம் ஈகை.
இந்த படத்தில் அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில், இளவரசு, புகழ், அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா, நிஷாந்த் ரகு, கிருஷ்ண சந்தர், காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தரண் குமார் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி ராமசாமி கலந்து கொண்டனர்.
படம் பற்றி இயக்குனர் அசோக் வேலாயுதம் கூறியதாவது: சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது. ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த படம். தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப்படம் சென்னை, மற்றும் ஐதராபாத், மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. என்றார்.