2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

வேகமாக வளர்ந்து வரும் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர் அதன்பிறகு மாஸ்டர், மாறன் படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் விக்ரமுடன் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது தங்கலான் அப்டேட்களை வெளியிடுவர்.
தற்போது இந்த படத்தில் நடிப்பதற்காக தனக்கு தினமும் 4 முதல் 5 மணி நேரம்வரை மேக் அப் போடப்படுவதாக படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார். மேக்அப் போடும்போது நான் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருப்பது பெரிய சவாலாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த படம் பீரியட் படம் என்பதால் சுமார் 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பெண்ணாக இதில் அவர் நடிக்கிறார். கருப்பு நிறம், அழுக்கான ஆடை, கனமான நகைகள் அணிந்து நடிக்கிறார். இந்த படம் என் கேரியரில் முக்கியமான படம். இதற்காக கடின உழைப்பை கொடுத்து வருகிறேன். என்று ஏற்கெனவே மாளவிகா கூறியுள்ளார். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு விக்ரம் காயம் அடைந்த தகவலையும் மாளவிகாதான் முதலில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.