தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

'த பேமிலி மேன் 2' என்ற சர்ச்சைத் தொடரை இயக்கிய தெலுங்கு இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே அடுத்து இயக்கும் வெப் தொடரில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்தொடரில் ஹிந்தி நடிகரான ஷாகித் கபூர், ராஷி கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
'த பேமிலி மேன் 2' தொடரையும், அப்படத்தில் இலங்கைப் பிரச்சினை பற்றி தவறான சில கருத்துக்களை முன் வைத்த ராஜ், டிகே படங்களையும் புறக்கணிக்க வேண்டுமென தமிழ் சினிமா உலகில் சிலரும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் சேதுபதி, ராஜ் மற்றும் டிகே இயக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பில் நேற்று முதல் நடித்து வருகிறார். அடுத்து அவர்கள் தயாரிக்க உள்ள ஒரு பான்-இந்தியா படத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளாராம்.
தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இருவரும் அப்படத்தில் நடிக்கப் போகிறார்களாம். சுந்தீப் கிஷன் தனது டுவிட்டரில், “பெரிய அண்ணன் மீதான அன்பு. ஒன் அன்ட் ஒன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, விரைவில்,” என பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை இயக்குனர்களின் இயக்கத்தில் வெப் தொடர், தயாரிப்பில் ஒரு படம் என விஜய் சேதுபதி நடிப்பது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.