22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சசிகுமார், சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 3வது வாரத்தை தாண்டியும், 75 கோடி வசூலைத் தாண்டியும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சசிகுமார் நடிப்பில் அடுத்து வரும் படம் 'ப்ரீடம்'. வருகிற ஜூலை 10ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ள இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்குகிறார். சசிகுமார், லிஜோமோல் ஜோஷ் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் கேஜிஎப் மாளவிகா, போஸ் வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
90 களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் உருவாகி வருகிறது. 'டூரிஸ்ட் பேமிலி' போன்று இலங்கை பின்னணி களத்தில், இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ராஜீவ்வை கொல்ல அனுப்பப்பட்ட மனித வெடிகுண்டு பெண்ணின் கதை என்பதை டீசரிலேயே வெளியிட்டிருந்தார்கள்.
90 காலக்கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த காலக்கட்டத்தைத் திரையில் கொண்டுவர, படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. 90களின் காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்ச்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்து, படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது.