ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் என பல படங்களில் நடித்தவர் கிரண். கதாநாயகி வாய்ப்பு குறைந்த பிறகு கேரக்டர் ரோல்களிலும் நடித்தார். அதோடு சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் கிரண், கவர்ச்சிகரமான புகைப்படங்கள், வீடியோக்களையும் வெளியிட்டு அதற்கென தனியாக ஒரு ஆப் ஒன்றையும் உருவாக்கி கல்லா கட்டி வருகிறார். இதனால் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கிறார்.
இந்த நிலையில், தற்போது கிரணின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சிலர் தனி மனித உரிமை மரியாதையை குறைக்கும் வகையில் போலியான மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களை பரப்புகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறேன். இந்த வீடியோவை பகிர்வது பதிவிறக்கம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.