ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காந்தாரா திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத். தமிழில் குரங்கு பொம்மை, மகாராஜா உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தெலுங்கிலும் ஓரிரு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் கட்டாளன் என்கிற படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மலையாள திரை உலகிலும் அடி எடுத்து வைக்கிறார் அஜ்னீஷ் லோக்நாத். பால் ஜார்ஜ் என்பவர் இந்தப்படத்தை இயகுகிறார்.
அங்கமாலி டைரீஸ், ஆர்டி எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற ஆண்டனி வர்கீஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்ற மார்கோ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஷரீப் முகமது தான் இந்த படத்தை தயாரிக்கிறார். மார்கோ படத்தில் கேஜிஎப் இசையமைப்பாளரான ரவி பர்சூரை அழைத்து வந்து இசையமைக்க வைத்த இவர், தற்போது அடுத்த அதிரடியாக காந்தாரா பட இசையமைப்பாளரை மலையாள திரையுலகிற்கு அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.