ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

தீபக் சுந்தர் ராஜன் இயக்கத்தில், கிருஷ்ண கிஷோர் பின்னணி இசையில், விஜய் சேதுபதி, டாப்சி, யோகி பாபு, ஜெகதி பாபு, ராதிகா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அனபெல் சேதுபதி'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 17ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இன்று(ஆக., 30) இப்படத்தின் டிரைலரை 5 மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தின் டிரைலர் இத்தனை மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறை.
படம் முழுவதும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பழங்கால கலை நுணுக்கம் வாய்ந்த அரண்மனைகள், கட்டிடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர்களும் படத்தில் உள்ளனர். கதாநாயகி டாப்ஸி ஹிந்தியில் பிரபலமானவர். கதாநாயகன் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தி வரை சென்றுவிட்டார். அதனால், ஐந்து மொழிகளிலும் படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
வழக்கம் போல இந்தப் படமும் ஒரு பேய்க் கதைதான். அது என்ன மாதிரியான கதை என்பதை டிரைலரின் கடைசியிலேயே யோகி பாபு பேசும், “புதுசா எவன்மா கதை சொல்றான், பழைய கதையைத்தான் அப்படியே உல்டா பண்ணி பண்றானுங்க, என்ன பண்றது,” வசனம் மூலம் புரிய வைத்துவிடுகிறார்கள்.
1948ல் வீர சேதுபதி ராஜா அவரது காதலி அனபெல்லுக்காகக் கட்டிய அரண்மனையை வாங்க ஜெகபதி பாபு அதீத ஆர்வம் காட்டுகிறார். 2021ல் அந்த அரண்மனைக்குள் ஒரு கும்பல் நுழைகிறது. அங்கிருக்கும் பொருட்களை கொள்ளையடிக்க முயல்கிறது. அங்கு ஏற்கெனவே இருக்கும் பேய்களுக்கும், கொள்ளையடிக்கச் சென்றவர்களுக்கும் இடையே நடக்கும் பரபரப்பான நகைச்சுவைச் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை என டிரைலரைப் பார்த்தால் ஓரளவுக்குத் தெரிகிறது.
டிரைலரின் ஆரம்பத்தில் சில காட்சிகளில் தான் வீர சேதுபதி ராஜாவாக விஜய் சேதுபதி வருகிறார். அதன்பின் யோகி பாபு, டாப்ஸி, ராதிகா அன்ட் கோ தான் டிரைலரில் அதிகம் வருகிறார்கள்.
80களில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஆர்.சுந்ததர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜான் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஏற்கெனவே, இப்படியான பேய், அரண்மனை, பழைய பங்களா, என பல படங்களில் பார்த்துவிட்டோம். ஆனால், டிரைலரைப் பார்க்கும் போது காமெடிக்குப் பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது.
டிரைலரப் பார்த்து ஏமாறப் போகிறோமா, ஹாஹாவென சிரிக்கப் போகிறோமா என்பது செப்டம்பர் 17ம் தேதி தெரிந்துவிடும்.




