ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சிம்புவுக்கு ஜோடியாக 'காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமானவர் சார்மி. அடுத்தடுத்து தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர், ஒருகட்டத்தில் நடிப்புக்கு குட்பை சொலிவிட்டு தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அந்தவகையில் இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வரும் சார்மி, தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் லீகர் என்கிற படத்தை தயாரித்து வருகிறார்,.
இந்தநிலையில் தான் சோஷியல் மீடியாவை விட்டு விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் சார்மி. பெரும்பாலான நடிகைகளை போல கவர்ச்சிகரமான புகைப்படங்களையோ அல்லது தினசரி ஏர்போர்ட்டுக்கோ ஜிம்முக்கோ செல்லும் புகைப்படங்களை எல்லாம் வெளியிடாமல், தான் சம்பந்தப்பட்ட முக்கியமான நிகழ்வுகளை மட்டுமே சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார் சார்மி. இந்தநிலையில் நல்ல விஷயத்துக்காக சோஷியல் மீடியாவில் இருந்து சற்று இடைவெளி எடுத்துக் கொள்கிறேன் என கூறிவிட்டு அவர் விலகுவது தான் ஆச்சர்யம் அளிக்கிறது.