எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் |
இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று விட்டார் நடிகர் தனுஷ். தற்போது அவர் கைவசம் ‛‛மாறன், நானே வருவேன்'', தெலுங்கில் இரு படங்கள் உள்ளன. இவற்றுடன் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். தனுஷின் 44 படமாக உருவாகும் இப்படத்திற்கான அறிவிப்பு இன்று(ஆக., 4) வெளியிடப்பட்டது. தனுஷ் ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். நாளை முதல் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அதோடு படத்தின் தலைப்பும் நாளை மாலை 6மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.